மாநில ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

 

தேவாரம், பிப். 6: பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூரில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஜூடோ போட்டிகள் நடைபெற்றன. இதில் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் நித்தீஸ்வரன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.

மாணவர் அப்துல் பாசில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.இதன்படி மாநில போட்டியில் பதக்கம் ெவன்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியை ப்ளோரா பாத்திமா ராணி ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் ஜாபர் சித்திக் கேடயம் வழங்கி பாராட்டினார்.இந்த விழாவில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு