மாநில அளவில் பெண்களுக்கான ஹாக்கி போட்டி தொடக்கம்

தேவதானப்பட்டி, மே 20: தேவதானப்பட்டி அருகே கல்வி பொதுப்பள்ளியில் மாநில அளவில் பெண்கள் இளையோருக்கான ஹாக்கி போட்டி தொடங்கியது. கல்வி பொதுப்பள்ளியில் மாநில அளவில் பெண்கள் இளையோருக்கான ஹாக்கி போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியை பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார், பெரியகுளம் டிஎஸ்பி, கீதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்வி பொதுப்பள்ளி குழும தலைவர் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு ஹாக்கி குழும பொதுச்செயலாளர் செந்தில்குமார், தேனி மாவட்ட ஹாக்கி செயலாளர் சங்கிலிகாளை, தேவதானப்பட்டி பேரூராட்சி சேர்மன் முருகேஸ்வரி ராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண்கள் இளையோருக்கான ஹாக்கி போட்டியில் 27 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.

Related posts

பக்ரீத் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர் திரளாக பங்கேற்பு

காங்கயத்தில் அரசு பேருந்து-கார் மோதல்

கேரளாவிலிருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு அன்னாசி பழம் வரத்து அதிகரிப்பு