மாநில அளவிலான வளைபந்து போட்டி கம்பம் பள்ளி மாணவர்கள் வெற்றி

கூடலூர், ஜன. 20: மாநில அளவிலான வளைவந்து போட்டி தர்மபுரியில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் ஜூனியர் இரட்டையர் பிரிவுக்கான போட்டியில் பங்கேற்ற கம்பம் சிபியு மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர் ருத்ரன் மற்றும் 8ம் வகுப்பு மாணவன் லத்தீஷ் ஆகியோர் மாநில அளவில் 3ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றனர்.

அதேபோல் மாணவிகளுக்கான ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இப்பள்ளி பிளஸ் 1 மாணவி ரியாஸ்ரீ மாநில அளவில் 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களையும், பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஆசிக், உடற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்களை பள்ளி தாளாளர் திருமலை சந்திரசேகரன், பொருளாளர் ராமசாமி, தலைமை ஆசிரியர் சையது அபுதாஹிர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை