மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை

பெரியகுளம், ஏப்.7: பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரகாரத்தில் நாமத்வார் பிரார்த்தனை மையம் உள்ளது. இந்த மையத்தில் மழை வேண்டி 24 மணிநேரம் ஹரே ராம நாம கீர்த்தனம் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் ஏகாதசி பூஜை, துவாதசி பூஜை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பழங்கள், பன்னீர், தேன் மற்றும் மங்கள திரவிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு