மழைக்கு கான்கிரீட் வீடு இடிந்து சேதம்

அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்த டி.பெருமாபாளையம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் சித்தேஷ் (50). மாற்றுத்திறனாளி. இவர் வசித்து வந்த பழமையான கான்கிரீட் வீடு நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு இடிந்து விழுந்தது. அப்போது, சித்தேஷ் மற்றும் அவரது மனைவி சித்ரா, மகன் ஆகியோர் வெளியே படுத்திருந்ததால், காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த, ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், மழையால் இடிந்த வீட்டை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்