மளிகை கடையில் திருட்டு

நரசிங்கபுரம் : நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் சேலம் -கடலூர் பிரதான சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை கடையை திறந்த போது, மேற்கூரை பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். கல்லாவில் வைத்திருந்த ₹5 ஆயிரம் பணத்தை காணவில்லை. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து கல்லாவில் இருந்த பணம் மற்றும் அங்கிருந்த உண்டியலை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூர் நகர போலீசார் நேரில் சென்று, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்