மருதுறை ஊராட்சியில் குடிநீர் குழாய், பித்தளை பைப் திருட்டு; போலீசில் புகார்

 

காங்கயம், மார்ச் 26: காங்கயம் ஒன்றியம், மருதுறை ஊராட்சி காளிவலசு கிராமத்தில் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தியும், திருடிச்சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கயம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருதுறை ஊராட்சி தலைவர் செல்வி சிவகுமார் காங்கயம் டி.எஸ்.பி பார்த்திபனிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:

காங்கயம் வட்டாரம் மருதுறை ஊராட்சி காளிவலசில் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ் தனிநபர் வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தியதோடு அதில் பொருத்தப்பட்டு இருந்த பித்தளை குழாய்களை திருடி சென்றுள்ளனர்.

இதனால் மேற்படி கிராமத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் நேரத்தில் தமிழக அரசின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே விசாரணை நடத்தி மேற்கண்ட பகுதியில் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தியும் திருடிச்சென்ற மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு