மரத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி

சங்ககிரி, மார்ச் 7: சங்ககிரி முதலியார் தெருவைச் சேர்ந்தவர் அர்த்தனாரி மகன் மணிகண்டன்(21). இவர், நேற்று நண்பர்களான விஜய், சிலம்பரசன் ஆகியோருடன், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சென்றார். பின்னர், 3 பேரும் டூவீலரில் பவானி நோக்கி சென்று கொண்டிருந்தனர். வண்டியை மணிகண்டன் ஓட்டியுள்ளார். பச்சக்காடு என்னுமிடத்தில் சென்றபோது, திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க, இடது பக்கமாக திருப்பியபோது அங்குள்ள வேப்பமரத்தில் டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். மற்ற இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து மணிகண்டனின் தாய் தனலட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்