மம்தாவின் நேற்றைய ஸ்பெஷல் ‘மோமோ’

கொல்கத்தா: டார்ஜிலிங் சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மோமோ செய்தார். இந்த வீடியோவை அவர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் பயணமாக கடந்த செவ்வாயன்று டார்ஜிலிங் சென்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், டார்ஜிலிங் மலையில் நடைபயணம் சென்ற அவர் அங்குள்ள உணவு கடையில் பானி பூரி தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கினார். இந்நிலையில், மம்தா நேற்று தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதில் சுயஉதவி குழு பெண்களோடு கலந்துரையாடிக் கொண்டே, ‘மோமோ’ தயாரிக்கிறார். மம்தா, தனது பேஸ்புக் பதிவில், ‘இன்று காலை நடைபயணம்  சென்றபோது நான் மோமோஸ் தயாரித்தேன். இதுபோன்ற சிறப்பு தருணங்களை எனது மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. டார்ஜிலிங் எப்போதும் எனது நெஞ்சில் நீங்காமல் இருக்கும்.’ என்று கூறியுள்ளார்….

Related posts

ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கடிதம்

மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் ‘பிஓகே’ இந்தியாவில் சேரும்: மகாராஷ்டிராவில் உ.பி. முதல்வர் பேச்சு