மது விற்ற 2 பேர் கைது

 

தேவதானப்பட்டி, ஜூலை 17: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் எஸ்.ஐ.,மணிகண்டன் மற்றும் போலீசார் மேல்மங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல்மங்கலம் ஒத்தவீடு அருகே நின்று கொண்டிருந்த அம்மாபட்டி தெருவைச் சேர்ந்த சொக்கப்பன்(60) என்பவரை சோதனை செய்ததில் அவர் அனுமதியின்றி விற்பனைக்காக 15 மது பாட்டில்கள் வைத்திருந்தார். போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஜெயமங்கலம் நான்கு ரோடு அருகே காந்திநகர் காலனியைச் சேர்ந்த வேலுச்சாமி(72) என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் 14 மது பாட்டில்கள் அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்தார். மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு