மது விற்றவர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ பாலசுப்பிரமணியன், எஸ்எஸ்ஐ பாலா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சிறுமலை பிரிவு, பித்தளைப்பட்டி பிரிவு, புளியம்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு மது விற்றதாக வேலுச்சாமி (49), சுமதி (33) முத்துசாமி (49) ஆகியோரை கைது செய்தனர்.மேலும் இவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் மது விற்றதாக சந்தியாகு (35), சுரேஷ் (45), கிருபாநதி (32), கிருஷ்ணமூர்த்தி (50) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு