மது விற்பனை: 6 பேர் மீது வழக்கு

போடி, ஜன. 19: போடி நகர் காவல்நிலைய எஸ்.ஐ திருமுருகன் தலைமையிலான போலீசார், நகரில் உள்ள குலாலர்பாளையம் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வாமணன் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (47) என்பவர் தனது பெட்டிக்கடையில் அனுமதி இல்லாமல் 6 பாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதேபோல, நாட்டாண்மைக்காரன் தெருவை சேர்ந்த மணிவாசகன் (31), ராமகிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த சுரேஷ் (38), மீனாட்சிபுரம் கர்ணன் தெருவைச் சேர்ந்த இளங்கோவன் (49), மேலச்சொக்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (37) ஆகியோர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்