மதுபிரியர்கள் மகிழ்ச்சி கறம்பக்குடியில் செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த தொழிலாளி

கறம்பக்குடி,ஏப்.17: குடும்ப பிரச்சினை காரணமாக செல்போன் டவரில் ஏறி தொழிலாளி மிரட்டல் விடுத்தார். 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின் அவர் கீழே இறங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (46). தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி (37). இவர்களுக்கு திருமணம் நடந்து 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பெருமாள் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பகல் கறம்பக்குடி மருத்துவர் காலனி பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறினார். இது பற்றிய தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை கீழே இறங்கும்படி சமசரம் செய்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் பெருமாள் மெதுவாக கீழே இறங்கினார். இதனால் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்