மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

 

ராமநாதபுரம், செப்.27: ராமநாதபுரம் அருகே போலி ஆவணம் தயார் செய்து மணல் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகளை வருவாய் துறையினர் மடக்கி பிடித்தார். ராமநாதபுரம் அருகே நயினார்கோயில்-பரமக்குடி சாலையில் மணல் கடத்துவதாக வந்த தகவலின் பெயரில் ராமநாதபுரம் தாசில்தார் தர் தலைமையில் வருவாய் துறையினர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையில் வந்த இரண்டு டிப்பர் லாரிகளை மறித்து விசாரிக்கும் போது வண்டி எண் தவறுதலாக பதிவிட்டிருந்த போலி பெர்மிட் ஆவணங்களை வைத்து மணல் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த தாசில்தார், வாகன ஓட்டுனர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். இரண்டு டிப்பர் லாரிகளும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது