மணக்குடி அண்ணா காலனியை சேர்ந்த 19 குடும்பங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும்

 

தஞ்சாவூர், ஜன.13: சாலியமங்கலம் பாபநாசம் சாலை அருகில் மணக்குடி அண்ணா காலனியை சேர்ந்த 19 குடும்பங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்தில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையின் அருகில் மணக்குடி அண்ணா காலனி கிராமத்தை சேர்ந்த 19 குடும்பங்கள் பல தலைமுறைகளாக குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறை உடனடியாக வீடுகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாதிப்புக்குள்ளான மக்களை நேரடியாக சென்று மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் அவர்களது கோரிக்கையை கேட்டறிந்தனர்.

அப்போது அந்த பகுதி மக்கள் உடனடியாக வீட்டை காலி செய்தால் மாற்று இடத்தில் உடனடியாக நாங்கள் வீடு கட்ட முடியாது பொங்கல் நேரத்தில் எங்களுக்கு மிகவும் சிரமமான சூழ்நிலை ஏற்படும் வருவாய்த்துறை ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்தால் அதற்குள் அரசு வழங்கும் இடத்தில் எங்களது வீடுகளைப் பிரித்துக் கொண்டு சென்று அங்கே தங்கி விடுவோம். அதுவரை எங்களை வருவாய்த்துறை நெருக்கடி செய்யாமல் இருக்க வேண்டும் எனவும் புதிதாக வீடு கட்ட அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு