மகள் சடலத்தை 10 கிமீ தோளில் சுமந்த தந்தை: அமரர் ஊர்தி வருவதில் தாமதம்

அம்பிகாபூர்: சட்டீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்தாலா கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவரது 7 வயது மகள் சுரேகா, கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனை தொடர்ந்து அருகில் உள்ள லக்கான்பூர் சுகாதார மையத்தில் தனது மகளை ஈஸ்வர் நேற்று முன்தினம் காலை அனுமதித்தார். சுரேகாவின் ஆக்சிஜன் அளவு 60க்கும் கீழ் இருந்ததாக தெரிகிறது. மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை அளித்துள்ளனர். எனினும், சுரேகா சிகிச்சை பலனின்றி காலை 7.30 மணிக்கு உயிரிழந்தார். அமரர் ஊர்தி வரும் வரை தனது மகளின் சடலத்தை மருத்துவமனையில் வைத்திருக்க ஈஸ்வர் தாஸ் விரும்பவில்லை. இதனால், மகளின் சடலத்தை தனது தோளில் தூக்கி சுமந்தபடி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். 10 கிமீ தொலைவில் உள்ள தனது வீடு வரை மகளின் சடலத்தை அவர் சுமந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்து மாநில சுகாதார துறை அமைச்சர் சிங் டியோ கூறுகையில், ‘மகளின் சடலத்தை சுமந்து செல்லும் வீடியோவை பார்த்தேன். மிகுந்த வேதனை அளிக்கிறது. சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி விசாரணை செய்து தேவையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்,” என்றார். இது குறித்து கிராம மருத்துவ உதவியாளர் கூறுகையில், ‘‘அமரர் ஊர்தி விரைவில் வந்துவிடும் என்று சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் தெரிவித்தோம். அமரர் ஊர்தி 9.20 க்கு வந்தது. ஆனால் அதற்குள்ளாக அவர்கள் சடலத்துடன் வெளியேறி விட்டனர்,” என்றார்….

Related posts

வேக கட்டுப்பாட்டை மீறும் ரயில் இன்ஜின் டிரைவர்கள்: ரயில்வே வாரியம் ஆலோசனை

`வெல்கம் மேடம்’ என வரவேற்று ஐஏஎஸ் மகளுக்கு `சல்யூட்’ அடித்த எஸ்பி: போலீசார் அகாடமியில் நெகிழ்ச்சி

எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு விவாதம் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்வது சாத்தியம்தான்: மீண்டும் சர்ச்சை கிளப்பும் அரசியல் கட்சிகள்