போலீஸ் விசாரணை பெல் வளாகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க 1,500 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

திருச்சி, செப்.25: திருச்சி பெல் வளாகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் முயற்சியாக ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியது. திருச்சி பெல் நிறுவனத்தின் உயர் அழுத்த கொதிகலன் ஆலை பிரிவு 2ன் அருகே ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பெல் வளாகத்தின் பசுமைப்பரப்பு அளவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி பெல் பொது மேலாளர் (பொ) ராமநாதன், கூடுதல் பொது மேலாளரான டாக்டர் துரைராஜ் மற்றும் பொறியியல், சிவில், ஆய்வகங்கள் துறை அலுவலர்கள் முன்னிலையில் மரக்கன்றுகளை முதல் மரக்கன்றை நட்டு மரம் நடும் இயக்கத்தை துவக்கி வைத்தார். பெல் நிறுவனம் ‘பசுமை பெல்’ என்ற இலக்கை நோக்கிய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதன் உறுதிப்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்து வருகிறது.

நேற்று துவக்கப்பட்ட மரம் நடும் இயக்கமானது அரசு சாரா நிறுவனமான மண்ணும் மரமும் இயக்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. தமிழக அரசின் வனத்துறை இதற்கு தேவையான மரக்கன்றுகளை தந்து உதவுகிறது. சிவில் துறையினர் மற்றும் பல்வேறு துறையின் ஊழியர்கள் என 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல நாட்டு ரக மரக்கன்றுகளை நட்டனர். பெல் வளாகத்தை சுற்றி இருக்கும் பசுமையான சுற்றுப்புறங்கள் மற்றும் தூய்மையான தயாரிப்புகள் வாயிலாக நிறுவனத்தின் பசுமை சான்றுகளை நிலை நிறுத்துவதற்குரிய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெல் வளாகம் பல்லுயிர் பாதுகாப்பில் முதன்மைாக உள்ளது.

பெல் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் வழக்கமாக மழைநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தோட்டங்களுக்கு பயன்படுத்துவது உள்ளிட்ட முறைகள் ஏற்கனவே உள்ளதாகும். வளாகத்தில் மியாவாக்கி மற்றும் வன மஹோத்சவம் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பிரசாரங்கள் வாயிலாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புங்கன், வேம்பு, நாவல், நீர் மருது உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களைக் கொண்ட ஆயிரத்து 500 மரக்கன்றுகளை நடும் இந்த பெரும் தோட்ட இயக்கத்தை இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு