போலீஸ்காரர் உட்பட 100 பேர் கும்பலால் திருமணமான சிறுமி 400 முறை பலாத்காரம்: மகாராஷ்டிராவில் பயங்கரம்

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவில் போலீஸ்காரர் உட்பட 100 பேர் கும்பலால் திருமணமான சிறுமி ஒருவர் கடந்த ஆறு மாதத்தில் 400 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின்  தாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். அதனால், அவரை அதேபகுதியை  சேர்ந்த ஒருவருக்கு அவரது தந்தை திருமணம் செய்து வைத்தார். கிட்டத்தட்ட ஒரு  வருடமாக அவரது மாமியார் வீட்டில் சிறுமி வசித்து வந்தார். அதன்பின்னர், அவரது  மாமனார் தன்னை தாக்கியதாக கூறி அந்த சிறுமி தனது தந்தையின் வீட்டுக்கு திரும்பினார்.  சில நாட்களுக்குப் பிறகு வேலை தேடி அம்பஜோகை நகருக்குச் சென்றார். அங்கு,  அந்த சிறுமிக்கு வேலை தருவதாக உறுதியளித்து இரண்டு ஆண்கள் அவரை பாலியல்  பலாத்காரம் செய்தனர். ஆனால், அவர்கள் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. குறிப்பிட்ட இடத்தில் தங்கியிருந்த அந்த சிறுமியை கடந்த ஆறு மாதத்தில் ஒரு  போலீஸ்காரர் உட்பட 100 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த ஜனவரி  29 முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை டோம்பிவலியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த  சுமார் 33 இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்தாண்டு  ஜனவரி மாதம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை ஒரு கும்பல்  எடுத்துள்ளது. அந்த கும்பல் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதால்,  பாதிக்கப்பட்ட சிறுமியின் விபரம் போலீசுக்கு தெரியவந்தது. அதையடுத்து  போலீசார் அந்த சிறுமியை தேடிப் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி  வருகின்றனர். இதுகுறித்து பீட் எஸ்பி ராஜா கூறுகையில், ‘குழந்தை திருமணமான மைனர் பெண்ணை கடந்த ஆறு மாதத்தில் ஒரு போலீஸ்காரர் உட்பட 100 பேர் 400 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தை திருமண சட்டம், பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம்’ என்றார். மைனர் சிறுமியை ஆறு மாதத்தில் 100 பேர் 400 முறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

மக்களவையில் துணை சபாநாயகர் பதவி தராவிட்டால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி போட்டி: மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு

லஞ்சம் வாங்கி கொண்டு வினாத்தாள் கசிவு, விடைத்தாளில் திருத்தம் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மை

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி