போலீசை மிரட்டிய பிரபல ரவுடி

சென்னை: சென்னை திருமங்கலம் பாடிக்குப்பம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு கஞ்சா போதையில் வந்த வாலிபர் கத்தியை எடுத்து, அவ்வழியாக சென்றவர்களை தடுத்து தகராறில் ஈடுபட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திருமங்கலம் போலீசார்அங்கு வந்து, கஞ்சா போதையில் ரகளை செய்த வாலிபரை மடக்க முயன்றனர். ஆனால், அவர் கத்தியை காட்டி போலீசாரை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். விசாரணையில், அந்த நபர், திருமங்கலம் பாடி குப்பம் பகுதியை சேர்ந்த பிரபல  ரவுடி நந்தா என்பவரின் சகோதரர் யுவராஜ் என்பது தெரிந்தது. அவரை தேடி வருகின்றனர்….

Related posts

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

மின்வாரிய ஊழியர் கொலையில் வாலிபர் நீதிமன்றத்தில் சரண்

மெட்ரோ ரயில் பணிக்கு வைத்திருந்த 7 டன் இரும்பு திருடிய இருவர் கைது