போலி நகைகளை வைத்து ரூ. 1.12 லட்சம் மோசடி; வாலிபர் கைது

பெரம்பூர்: அடகு கடையில் போலி நகைகளை வைத்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் (45). இவர் புளியந்தோப்பு சிவராஜபுரம் முதல் தெருவில் கடந்த 22 ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறார். இவரது அடகு கடைக்கு கடந்த மாதம் 22ம் தேதி புளியந்தோப்பு ஆசீர்வாதபுரம் பகுதியை சேர்ந்த இஸ்ரேல் (36) என்ற நபர் வந்து 33 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து முதலில் 33 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று சென்றார்.  அதன் பிறகு தனக்கு அவசர தேவைக்காக பணம் தேவைப்படுகிறது என்று கூறி கடந்த 12ம் தேதி மீண்டும் பணம் பெற்று மொத்தம் ஒரு லட்சத்து 12,500 வாங்கி சென்றுள்ளார். இரண்டாவது முறையாக பணம் வாங்கியதால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் சந்திரபிரகாஷ், இஸ்ரேல் கொண்டு வந்து கொடுத்த நகைகளை ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து உரிய விசாரணை நடத்தும்படி இஸ்ரேல் பேசின்பிரிட்ஜ் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த பேசின்பிரிட்ஜ் போலீசார் இஸ்ரேலை நேற்று கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

சேலம் அருகே காரில் வந்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது