போக்சோ சட்டத்தில் வாலிபர் அதிரடி கைது

 

சிதம்பரம், ஏப். 15: சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கார்த்திக் (21). இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அச்சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஜனவரி மாதம் 4ம் தேதி கிள்ளை பகுதியில் உள்ள ஒரு கோயிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இது குறித்து வந்த ரகசிய தகவலின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பூவழகி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை கர்ப்பமாக்கிய கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு