போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகரில், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை செல்லும் ஜி.எஸ்.டி சாலையில் மூன்று டாஸ்மாக் கடை மற்றும் எலைட் ஷாப் ஒன்றும் உள்ளன. செங்கல்பட்டில் இருந்து, கல்பாக்கம், மாமல்லபுரம், மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், வந்தவாசி, உத்திரமேரூர், திருப்போரூர் ஆகிய பகுதிகளுக்கு இந்த ஜி.எஸ்.டி சாலையை கடந்துதான் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் செல்ல வேண்டும். இந்த சாலை மிகவும் குறுகலானது. இங்கு, ஆங்காங்கே ஆட்டோக்கள், பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. எனவே, இப்பகுதியில், அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. குறிப்பாக, சுப முகூர்த்த தினங்களில் மணிகணக்கில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. செங்கல்பட்டு நகரில், ஜி.எஸ்.டி சாலையில் உள்ள இந்த மதுபான கடையினால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகின்றன. எனவே, மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என, செங்கல்பட்டு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனே செங்கல்பட்டு நகரில் உள்ள அரசு மதுபான கடைகளை மாற்று இடத்தில்அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கலாம் என, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைக்கின்றனர்.

Related posts

திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர் 287 பேர் ஆப்சென்ட்

மாநகர எல்லைப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மல்லுகட்டும் ஊழியர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: 2009 பேட்ஜ் காவலர்கள் வழங்கினர்