பொதுமக்கள் சாலை மறியல்

உத்தமபாளையம், ஏப். 4: உத்தமபாளையத்தை அடுத்த கோவிந்தன்பட்டியில் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக விழா கமிட்டியினர் ஒலிபெருக்கி அமைத்திருந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் ஒலிபெருக்கி மூலம் பாட்டு ஒலிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், அதிகாலையில் மைக்செட் போட வேண்டாம் என தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் மைக்செட் போட்டவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று காலை அனுமந்தன்பட்டி-கோவிந்தன்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அதிகாலையிலேயே போக்குவரத்து தடைபட்டது. இதனை அடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து மீண்டும் வாகனங்கள் செல்லத் தொடங்கின. மறியல் காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு