பொதுமக்கள் எதிர்பார்ப்பு கடம்பவனேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா ரத்து

குளித்தலை, டிச.29: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சந்திரசேகர் விடுத்துள்ள அறிவிப்பு: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் 23.4.2023 தேதியில் மூலவர் தவிர அம்மன் மற்றும் பதிவார தெய்வங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் தைப்பூச திருவிழா நடத்துவது தொடர்பாக மாநில சைவ ஆகம வல்லுநர் மற்றும் மண்டல சைவ ஆகம வல்லுனரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதன்படி ஆகம வல்லுனர்கள் மூலவர் தவிர அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் தைப்பூச திருவிழா நடத்த உத்தமம் இல்லை என்று கடிதம் வழங்கி உள்ளனர். அவர்கள் வழங்கிய ஆலோசனைப்படி இந்த ஆண்டு வரும் 25ம்தேதி தைப்பூச திருவிழா நடத்த இயலாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்