பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மாணவர் மாயம்

 

திருச்சி, பிப்.7: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் குளத்துப்பட்டி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகன் அஜய் (16). இவர் கோவையில் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி திடீரென யாரிடமும் சொல்லாமல் விடுதியில் இருந்து மாயமானார். இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம் 3 நாட்கள் மாணவனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து அஜயின் பெற்றோர் கோவை சென்று தனது மகனை ஊருக்கு அழைத்து வந்தனர். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இறங்கி புதுக்கோட்டை பஸ்கள் நிற்கும் இடம் அருகே சென்றபோது கழிவறைக்கு செல்வதாக கூறிச்சென்ற அஜய் மீண்டும் மாயமானார். இது குறித்து அவரது தந்தை சிவா கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்