பைக் விபத்தில் சிக்கிய தெலுங்கு நடிகர் கவலைக்கிடம்

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் சாய் தரம் தேஜ். தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நேற்று அவர் ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஐதராபாத்தில் உள்ள கேபிள் பிரிட்ஜில் மின்னல் வேகத்தில் சென்றார். அப்போது திடீரென்று பைக் ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாய் தரம் தேஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கடுமையான வலியால் துடித்த அவர் மயக்கம் அடைந்தார். உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் இன்னும் அவருக்கு நினைவு திரும்பவில்லை என்றும், உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன….

Related posts

மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் பா.ஜ தோல்வி: நன்றி தெரிவித்து கிண்டல் செய்த சரத்பவார்

நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியதாக புகார்; ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் இடித்து அகற்றம்: ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்த 11 பேரின் வீடுகள் இடிப்பு