பைக் மீது டிராக்டர் மோதி ஒருவர் பலி

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா குட்டேஹள்ளி கிராமத்தில் பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சிச்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா குட்டேஹள்ளி  கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தப்பா (45) வீட்டிற்கு மளிகை சாமான் வாங்கி வருவதற்காக கிராமத்தில் இருந்து பைக்கில் சென்றார்.  எகட்டி கிராமம் அருகே சென்ற போது எதிர்திசையில் இருந்து வந்த டிராக்டர் ஒன்று நிலைதடுமாறி பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கோவிந்தப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.    வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்….

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நாளையுடன் கெடு முடியும் நிலையில் ராகுல் தக்கவைத்துக் கொள்வது வயநாடா, ரேபரேலியா? இடைத்தேர்தலில் பிரியங்காவை களமிறக்க திட்டம்

டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை