பேஸ்புக்கில் மலர்ந்த காதல் எஸ்கேப் ஆன சிறுமி 10 மணி நேரத்தில் மீட்பு பெங்களூருவில் சிக்கினார்

ஜெயங்கொண்டம், ஜூன் 8: ஜெயங்கொண்டம் அருகே பேஸ்புக் மூலம் காதல் கொண்ட சிறுமியை தேடிச் சென்ற போலீசார் 10 மணி நேரத்தில் பெங்களூரில் இருந்து மீட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் வினோத் (23) கட்டிட தொழிலாளியான இவர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை பேஸ்புக் மூலம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வினோத் பெங்களூருக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து சிறுமி நேற்று முன்தினம் காலை புறப்பட்டு பெங்களூருக்கு சென்று விட்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தனச்செல்வன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து செல்போன் டவர் சிக்னலை வைத்து காரில் புறப்பட்டு சென்றனர். புகார் அளித்த அடுத்த 10 மணி நேரத்தில் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், போலீசார் வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

டயர் வெடித்ததால் சென்டர் மீடியனில் மோதிய தனியார் பஸ்

கல்லூரி வேன் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது