பேரவையில் அமளி பாஜ எம்எல்ஏ.க்கள் 4 பேர் சஸ்பெண்ட்

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 4 பாஜ எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 29ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. 3வது நாளான நேற்று முதல்வர் ஹேமந்த் சோரனை பதவி விலகக் கோரியும், ஊழல் குறித்து விவாதிக்கவும் வலியுறுத்தி, பாஜ எம்எல்ஏ.க்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இது குறித்து மதிய இடைவேளைக்கு பிறகு விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் ரவீந்திரநாத் மகதோ கூறியும் கேட்காமல் அவர்கள் முழக்கமிட்டனர். இதனால், அவை மதியம் 12.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் பாஜ எம்எல்ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பானு பிரதாப் ஷாகி உள்ளிட்ட 4 எம்எல்ஏ.க்களை நாளை வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். …

Related posts

தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக நாளை பதவி ஏற்கிறார் மோடி: உலக தலைவர்கள் வருகை

மக்கள் என்ன மாற்றத்தை விரும்பினரோ அதை அமைதியாக செய்துள்ளனர்: முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா பேச்சு

தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் ஆவேசம் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் சிலைகள் அகற்றம்: வீடுகள் மீது தாக்குதலால் வெளியூர்களில் கட்சியினர் தஞ்சம்