பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு

வத்திராயிருப்பு, ஏப்.23: வத்திராயிருப்பு அருகே கோயில் திருவிழாவில் பேனர் வைக்க முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். வத்திராயிருப்பு வணிக வைசியர் தெருவை சேர்ந்தவர் கலியனாண்டி மகன் கல்யாணகுமார்(19). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு பேனர் வைப்பதற்காக கம்பியை தூக்கிக் கொண்டு சென்றார்.

அப்போது வத்திராயிருப்பு நாடார் பஜார் பகுதியில் மின் வயரில் கம்பி உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் கல்யாணகுமார் மயக்கமடைந்தார். உடனே அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை