பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலி பறிக்க முயன்றவர் சிக்கினார்

 

கரூர்: கரூர் வெங்கமேடு அருகே நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன்றவரை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கரூர் வெங்கமேடு சோழன் நகரைச் சேர்ந்தவர் சரவஸ்வதி (48). ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 7மணியளவில் வெங்கமேடு எஸ்பி காலனி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரிடம் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர்களில் ஒருவர், சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார்.

அப்போது, சரஸ்வதி சுதாரித்துக் கொண்டு சத்தம் போடவும், அருகில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து, செயினை பறிக்க முயன்ற நபரை கையும் களவுமாக பிடித்து வெங்கமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, து£த்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளை ஊரணி பகுதியை சேர்ந்த எட்வின்ராஜ்(34) என்பது தெரியவந்ததோடு, அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, உடன் வந்து பைக்கில் தப்பியோடி மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளது தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது: தயாநிதி மாறன் எம்.பி. பேட்டி

கலைஞர் எனக்கு தந்தை போன்றவர்: அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

குற்ற சம்பவங்களை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் : துணை ஆணையர் அதிரடி