பெண்ணிடம் நகை பறிப்பு

திருப்பூர், ஏப். 7: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன்.(31) இவரது மனைவி கவிதா(27), இவர்கள் குடும்பத்துடன் பழவஞ்சிபாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாண்டியன் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற பின், மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டிலிருந்துள்ளனர். அப்போது பைக்கில் வந்த 2 பேர் கவிதாவிடம் முகவரி கேட்டுள்ளனர்.

கவிதா முகவரி தெரியாது எனக் கூறவே திடீரென இரண்டு பேரும் வீட்டிற்குள் புகுந்து கவிதாவை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை