பூத்து குலுங்கும் ஜெகரண்டா

ஏற்காடு, மார்ச் 9: ஏற்காட்டில் கால நிலைக்கு ஏற்ப பல்வேறு வகையிலான மலர்கள் பூத்து குலுங்கும். கோடை காலம் வரவிருப்பதை அறிவிக்கும் விதமாக ஏற்காடு மலை பகுதியில் ஜெகரண்டா மலர்கள் பூத்து குலுங்கத் துவங்கியுள்ளன. கோடை காலங்களில் மட்டுமே இந்த மலர்கள் பூக்கும். குளிர் காலத்தில் மரங்களில் உள்ள இலைகள் முழுவதும் உதிர்ந்த நிலையில், கோடை காலம் துவங்கும் மார்ச் மாதத்தில் மரங்கள் அனைத்திலும் ஜெகரண்டா மலர்கள் கொத்து கொத்தாக பூத்து குலுங்குகின்றன. ஜெகரண்டா மிமோசி போலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லாவண்டர் நீல நிற பூக்கள் தற்போது ஏற்காடு மலை பகுதியில் பல்வேறு பகுதிகளில் பூத்துள்ளன. குறிப்பாக படகு இல்லம் சாலையில் அதிகளவில் பூத்துள்ளது. இந்த ஜெகரண்டா மலர்கள் மரங்களில் மட்டுமே பூக்கக்கூடிய வகையைச் சேர்ந்தது. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இந்த மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தும் வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்