புதுமைப்பெண் திட்டத்தில் 6,569 மாணவிகள் பயனடைந்துள்ளனர்

 

காஞ்சிபுரம், மே 25: பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ்நாடு முதல்வரால் கொண்டு வரப்பட்டதே (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம்) புதுமைப்பெண் திட்டமாகும். இதன் மூலம், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று, உயர் கல்வியில் சேர்ந்த 2.73 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த புதுமைப்பெண் திட்டத்தின் மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 6,569 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர் என்று காஞ்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்