கோயில்களில் பணம், நகை கொள்ளை

 

உத்திரமேரூர், மே 25: உத்திரமேரூர் அடுத்த பென்னலூர் கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதியம்மன் மற்றும் செல்லியம்மன் கோயில்கள் உள்ளது. இக்கோயிகளில், தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் கிராம மக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கோயிலை பூட்டிவிட்ட நிலையில் நேற்று காலை கோயிலை சுத்தம் செய்யும் மூதாட்டி ஆயம்மாள் (65) என்பவர், கோயிலில் வந்து பார்த்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதனை கண்டு, அதிர்ச்சியடைந்த மூதாட்டி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெருநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விசாரித்ததில் 2 கோயில்களிலும் உண்டியல் உடைக்கப்பட்டு, சுமார் ரூ.10 ஆயிரம் பணமும், திரவுபதி அம்மனின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க மாங்கல்யமும் திருடுபோனது தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்