புதுச்சேரியில் பள்ளிகள் மூலமாக ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரத்தை நுழைக்க பாஜகவினர் முயற்சி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகள் மூலமாக ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரத்தை நுழைக்க பாஜகவினர்  முயற்சி செய்வதாகவும், அதற்கு கல்வி அமைச்சர் நமசிவாயம் உடந்தையாக இருப்பதாகவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், கல்வித்துறையை முதல்வர் தன் கையில் எடுத்து இவ்விஷயங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் அவர், பாரத் மாதா கி ஜே என்றும், ஜெய் காளி என்றும் கோஷம் போடுவதற்கு மாணவர்களை தூண்டி விடுகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்- பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு, கல்வித்துறை பொறுப்பாளராக இருக்கக்கூடிய அமைச்சரின் தொகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இவைகள் வேண்டும் என்றே திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரத்தை புதுச்சேரி மாநில மக்கள் மத்தியில் பள்ளிகள் மூலமாக உள்ளே நுழைப்பதற்கான வேலையை புதுச்சேரியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மறைமுகமாக செய்கிறது என தெரிவித்தார். இத்தகைய செயலுக்கு அத்துறையின் அமைச்சர் தூண்டுகோலாக இருக்கிறார். இந்த செயல் வன்மையாக கண்டிக்க தக்கது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்     …

Related posts

டெல்லியில்சரிதா விஹார் காவல்நிலையம் அருகே ஷான்-இ- பஞ்சாப் விரைவு ரயிலில் தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பயங்கர விபத்து: 5 பேருக்கு காயம்

முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பிற்பகல் ஆர்டரை தவிர்க்க வேண்டும்: வாடிக்கையாளர்களிடம் சொமேட்டோ வேண்டுகோள்