புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி துவக்கம்

புதுக்கோட்டை, ஏப். 3: நீட் தேர்வு இந்த ஆண்டு மே 5ம் தேதிநடைபெற உள்ளது. இந்நிலையில், விண்ணப்பம் செய்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் நேரடியாக இலவச நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 600 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை ராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இலுப்பூர் ஆர்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று தொடங்கிய இந்த வகுப்புகளில் மூன்று இடங்களில் மொத்தம் 255 மாணவ மாணவிகள் பயிற்சி பெற்றனர். இன்னும் வரும் நாட்களில் மாணவ மாணவிகளின் வருகை அதிகரிக்கும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் சனிக் கிழமை வரை காலை 9.15 மணிக்கு தொடங்கி மாலை 4.30 வரை நீட் பயிற்சி வகுப்பு நடைபெறும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு