புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் சுயம்புலிங்க சிவன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

புதுக்கோட்டை, மே 15: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்பாள் சமேத அரங்குலநாதர் கோயில் உள்ளது. சுயம்புலிங்க சிவன் கோயிலான இங்கு வைகாசி விசாகத் திருவிழா, இரட்டை தேரோட்டம் நடைபெறும் வழக்கம். இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோயில் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு 75 அடி உயர ராஜகோபுரம் மின்னலங்காரத்தில் ஜொலிக்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காளை வாகனத்துடன் அமைந்துள்ள கொடி படத்திற்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.

பின்னர் சிவன் சன்னதியில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து சுவாமி அம்பாள் மேளதாளத்துடன் ஊர்வலமாக தேரோடும் நான்கு வீதிகளிலும சென்று வந்தது. 21ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை சுவாமி அம்பாள் தேர் பவனி நடைபெற உள்ளது. 22ம் தேதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு தெப்பக்குளமான திருக்குளத்தில் சுவாமி அம்பாள் தெற்கு உற்சவம் நடைபெற உள்ளது.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை