புதுக்கோட்டையில் முரசொலிமாறன் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை, ஆக.18: முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் 90வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று திமுகவினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முரசொலிமாறன் படத்திற்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா, நகர செயலாளர் செந்தில், வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் முத்துகருப்பன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் மாநில மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது