பி. கே.அகரம் ஊராட்சியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

லால்குடி, செப்.26: லால்குடி அருகே பி.கே.அகரம் ஊராட்சியில் நடைபெற்ற காசநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். லால்குடி அருகே பி.கே.அகரம் ஊராட்சியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை புள்ளம்பாடி வட்டார காசநோய் தடுப்பு மேற்பார்வையாளர் பவானி துவக்கி வைத்து பேசினார். காசநோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் வழக்கமான பரிசோதனைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சத்தான உணவு, உடற்பயிற்சி செய்தல் பற்றியும், புகைபிடித்தல் மற்றும் மதுவை தவிர்த்தல் குறித்து எடுத்துக்கூறினார். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் மங்கையர்க்கரசி, வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்