பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் பொகலூரில் கொடியேற்று நிகழ்ச்சி

அன்னூர்,மார்ச்27: பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டம், அன்னூர் அடுத்துள்ள பொகலூர் பேருந்து நிலையம் அருகே கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பு தலைவர் ரத்னசபாபதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி வெள்ளியங்கிரி கலந்து கொண்டு கூட்டமைப்பின் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் பொகலூர் வீரமாத்தி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் கூட்டமைப்பின் சார்பில் அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்று தர இந்த கூட்டமைப்பை உருவாக்கப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற டிஎஸ்பி வெள்ளியங்கிரி பேசினார். இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் செயலாளர் திருஞான சம்பந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டம் கணேசபுரம், அன்னூர், பொகலூர் ஆகிய மூன்று இடங்களிலும் நடைபெற்றது….

Related posts

குருந்தமலை அடிவாரத்தில் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்த நபர் கைது

மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது

பணி ஓய்வு பிரிவு உபசார விழா பேங்க் ஆப் இந்தியாவில் நிலையான வைப்புத்தொகை திட்டம் அறிமுகம்