பிரம்மோத்ஸவ திருவோண திருவிழா: கருட வாகனத்தில் வெங்கடேச பெருமாள் வைரமுடி சேவை

பட்டுக்கோட்டை, மே 11: பிரம்மோத்ஸவ திருவோண திருவிழாவை முன்னிட்டு வெங்கடேச பெருமாள் கருட வாகனத்தில் வைரமுடி சேவை சாதித்தார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை காசாங்குளம்  பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோத்ஸவ திருவோணத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் பிரம்மோத்ஸவ திருவோணத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கருட வாகனத்தில் வைரமுடி சேவையில் வெங்கடேசப் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வரும் திருவிழா மண்டகப்படியை நகரத்தார்கள் ஆண்டுதோறும் தொன்று தொட்டு நடத்தி வருகின்றனர்.

அதேபோல் இந்த ஆண்டும் பட்டுக்கோட்டை நகரத்தார்கள் ஒன்றிணைந்து பிரம்மோத்ஸவ திருவோணத் திருவிழாவின் முக்கிய விழாவான கருட வாகனத்தில் வைரமுடி சேவையில் வெங்கடேசப் பெருமாள் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியை நடத்தினர். முதலில் கோயிலில் கருட வாகனத்தில் வைரமுடி சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த வெங்கடேசப் பெருமாளுக்கு அனைத்து ஆராதனைகளும் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரிய தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து நாதஸ்வரம், மேளம் முழங்க கருட வாகனத்தில் வைரமுடி சேவையில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் காசாங்குளம் 4 கரைகளிலும் சுற்றி வீதி உலா வந்தார். நிகழ்ச்சியில் நகரத்தார் பெருமக்கள் உள்பட ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, சுண்டல்,தயிர்சாதம் ஆகிவை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகரத்தார்கள் அனைவருக்கும் காளாஞ்சி வழங்கப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்