பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது தமது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்!: செவிலியர் நிஷா சர்மா நெகிழ்ச்சி..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பது தமது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என்று பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த செவிலியர் நிஷா சர்மா தெரிவித்திருக்கிறார். தடுப்பூசி செலுத்திக்கொள்ள பிரதமர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்த நிஷா, அவருக்கு தாம் தான் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது காலையில் தான் தெரிந்ததாக கூறினார். பரிவுடன் தன்னிடம் பேசிய பிரதமர் மோடி தமது சொந்த ஊர் பற்றி கேட்டறிந்து கொண்டதாக கூறினார். பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியின் போது முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பாண்டிசேரியை சேர்ந்த செவிலியர் நிவேதாவும் உடனிருந்தார். இதுகுறித்து செவிலியர் நிஷா சர்மா தெரிவித்ததாவது, கொரோனா 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள பிரதமர் மோடி எய்ம்ஸ் வருகிறார் என்றும், அவருக்கு நான்தான் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதும் காலை தான் எனக்கு தெரிந்தது. பின்னர் மருத்துவமனை வந்த அவருக்கு தடுப்பூசி செலுத்தினேன். பிரதமரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். என்னுடன் சிறிது நேரம் பேசிய அவர், பிறந்த ஊர் பற்றி கேட்டறிந்தார். பின்னர் பிரதமருடன் நாங்கள் புகைப்படமும் எடுத்துக் கொண்டோம் என தெரிவித்தார். இதேபோல் செவிலியர் நிவேதா தெரிவித்ததாவது, பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் செவிலியர் நிஷா சர்மாவுக்கு நான் உதவி புரிந்தேன்.  பிரதமருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியது நான் தான். இரண்டாவது முறை பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுடன் சாதாரணமாக பிரதமர் பேசி கொண்டிருந்தார். பின்னர் அவருடன் நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் என குறிப்பிட்டார். தடுப்பூசி செலுத்திய செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு பிரதமர் மோடி, அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார். …

Related posts

ஏர் இந்தியா விமான இன்ஜினில் தீ: புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கம்

பெண் எம்பி தாக்கப்பட்ட வழக்கு; கெஜ்ரிவால் உதவியாளரை 5 நாள் விசாரிக்க அனுமதி

திருப்பதியில் தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள்; 2வது நாளாக 3 கி.மீ. நீண்ட வரிசை: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்