பாலக்காடு அருகே சிறுமி பலாத்காரம் பாஜ நிர்வாகி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அருகே ஆணிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (26). பா.ஜ இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா பிராயிரி பகுதி நிர்வாகி. இவர், மலம்புழா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்து உள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வயிறு வலிப்பதாக சிறுமி பெற்றோரிடம் கூறி உள்ளார். டாக்டர்களிடம் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. மறுநாளே அவர் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். இதுகுறித்து மலம்புழா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ரஞ்சித்தை கைது செய்து பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை  தொடர்ந்து யுவமோர்ச்சா அமைப்பிலிருந்து ரஞ்சித் நீக்கப்பட்டார்….

Related posts

மருமகனுடன் தகாத உறவு வைத்த பெண் கழுத்தை அறுத்து கொலை

பட்டா வழங்க ரூ.8,000 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை: 14 ஆண்டுகளுக்கு பின் தண்டனை

மபி, உத்தரகாண்ட் மாநிலங்களை அதிரவைத்த கொலை: 2 பயணிகள் ரயிலில் சிக்கிய பெண்ணின் உடல்பாகங்கள்