பார்த்தீனிய செடியில் களை கட்டுப்பாடு வேளாண்துறை அட்வைஸ்

 

சோழவந்தான், மே 25: பார்த்தீனிய செடியில் ஒருங்கிணைந்த களை கட்டுப்பாடு குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர். இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியுள்ளதாவது: பார்த்தீனியம் வெப்ப மண்டத்தில் வளரும் ஒருவித களைச்செடி ஆகும். இச்செடியில் உற்பத்தியாகும் விதை அதிக நாட்கள் உறக்க நிலையில் இருக்கும் பண்புடையது. அளவில் சிறியதாக இருக்கும் இக்களையின் விதையானது காற்றில் அதிக தூரம் சென்று பரவக்கூடியது. ஒரு செடியில் இருந்து ஒரு வருடத்தில் சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் விதைகள் வரை பரவும் தன்மையுடையது. இவ்விதைகள் முதிர்ச்சி அடையாத பருவத்திலும் உடன் முளைக்கும் தன்மை உடையது.

இதனை கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
களைச்செடி பூப்பதற்கு முன்பே கையினால் பிடுங்கி அழித்து விடலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைவரும், ஒன்று சேர்ந்து ஒரே சமயத்தில் அழித்தால் அதிக அளவில் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். இக்களையின் மூலம் அதிகளவில் நிலம் பாதிக்கப்பட்டிருந்தால் பயிர் சுழற்சி முறையில் செண்டுமல்லி எனும் பூச்செடியினை பயிர் செய்வதன் மூலம் ஈக்கள் பரவுவதை குறைக்கலாம். தரிசு நிலங்கள், இருப்பு பாதைகள், சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் அளவில் உப்பை கரைத்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும்.

களைக் கொல்லிகளை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் பெருமளவு பார்த்தீனிய களைகளை குறைக்கலாம். பார்த்தீனிய களை அதிகளவில் விதைகளை உற்பத்தி செய்யக்கூடியது. எனவே, இக்களையினை சேகரித்து ஊட்டமேற்றிய உரமாக மாற்றி பயன்படுத்தலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்