பாஜ தலைவர் வீடு மீது தீவிரவாதிகள் தாக்குதல்: போலீஸ்காரர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் பாஜ பொது செயலாளர் மற்றும் குப்வாரா மாவட்ட பாஜ பொறுப்பாளர் அன்வர் அகமது. இவரது வீடு நவ்காமின் அரிகாம் பகுதியில் அமைந்துள்ளது. நேற்று காலை தீவிரவாதிகள் இவரின் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றனர். இதில், அன்வர் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரமீஸ் ராஜான என்ற போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு, தப்பிச் சென்ற தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை….

Related posts

மோடி பதவியேற்பு விழாவிற்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்து!

தேர்தல் முடிவு மோடிக்கு கிடைத்த தார்மீக தோல்வி: சோனியாகாந்தி பேச்சு

ஆந்திராவில் ஆட்சியை பிடித்த நிலையில் சந்திரபாபுநாயுடு மனைவி சொத்து 5 நாளில் ரூ584 கோடி உயர்ந்தது