பாகப்பிரிவினை தகராறில் தம்பி மனைவியை தாக்கிய விவசாயி கைது

திருவிடைமருதூர்: நாச்சியார்கோவில் அருகே சொத்து தகராறில் தம்பி மனைவியை தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்தனர். நாச்சியார்கோவில் அடுத்துள்ள திருப்பந்துறை மாதாகோவில் தெருவில் வசிப்பவர் யேசுமாணிக்கம் மகன் வில்சன் (46), விவசாயி. இவரது தம்பி பாரதிதாஸ் (42) டிரைவர். இவர்களுக்கு திருமணமாகி கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். இவர்களது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்நிலையில் அண்ணன், தம்பி இடையே குடியிருக்கும் வீட்டை பாகப்பிரிவினை செய்து கொள்வது தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பாரதிதாஸ் மனைவி மரியலூர்துஅரசியை (35) வில்சனும், இவரது மனைவி வயலட்ரீனாவும் (41) சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு பட்டையால் தாக்கியதில் படுகாயம் அடைந்த மரியலூர்து அரசி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து வில்சனை கைது செய்தனர்.

Related posts

அரசு மாதிரி பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில் பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

மயிலாடுதுறை அருகே பரபரப்பு; மாயமான பெண் வாய்க்காலில் சடலமாக மீட்பு: கட்டுமான நிறுவன வாகனம் மோதி இறந்ததாக உறவினர்கள் போராட்டம்