பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஆளவந்தீஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி விழா

கிருஷ்ணராயபுரம், டிச.21: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சிப்பதால் சனிபகவானுக்கு பால், தயிர் ,பழங்கள், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், பன்னீர், திருமஞ்சனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.அதேபோல் கிருஷ்ணராயபுரம் திருக்கண் மல்லீஸ்வரர் கோயில், மகாதானபுரம் விஸ்வநாதர் கோயில், லாலாபேட்டை செம்பொற் சோதீஸ்வரர் கோயில், கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Related posts

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்: சாத்தூரில் பரபரப்பு

சிவன் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு