பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி

தேனி, டிச. 30: தமிழ்நாடு ஒருங்கிணைந்த் பள்ளிக்கல்வித் துறை சார்பில் குளிர்கால 2 நாள் உண்டு, உறைவிட பயிற்சி பட்டறை மாநில அளவில் 4 மண்டலங்களாக பிரித்து நடத்பதப்பட்டு வருகிறது. இதில் தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான பயிற்சி ராமநாதபுரத்தில் உள்ள சையதுஅம்மாள் கல்லூரியில் கடந்த் 2 நாட்களாக நடந்தது. இப்பயிற்சி பட்டறையில் தேனி மாவட்டத்தில் இருந்து மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைப்பாளராக அறிவியல் ஆசிரியர் உஸ்மான்அலி , சிறப்பு பயிற்றுனர் மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியின்போது, அடிப்படை ரோபோடிக்ஸ் பயிற்சியை சென்னையை சேர்ந்த பூமி தன்னார்வ தொண்டு நிறுவன இணை இயக்குநர் பானுஅரிகரபுத்திரன் மற்றும் 16 பேர் கொண்ட குழுவினர் பயிற்சி அளித்தனர்.அப்போது, தானியங்கி குழாய், தண்ணீர் நிரம்பி வருதலை கண்டுணர்தல், இரவு நேரங்களில் தானியங்கி ஒளி, தெருவிளக்குகள் அமைத்தல், தொட்டால் எச்சரிக்கை ஒலி போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்