பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டுகோள்

 

தொண்டி,ஜன.22: தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்து விட்டதால் பாதுகாப்பாற்ற சூழல் நிலவுகிறது. உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகம் மாவட்டத்திலேயே அதிக பரப்பளவு கொண்ட பள்ளியாகும். மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளும் நடைபெறும்.

சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். மிகவும் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் மிகவும் மோசமடைந்து சில இடங்களில் இடிந்தும் உள்ளது. இது பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி சாதிக் பாட்ஷா கூறியது, மாவட்ட அளவில் அதிக பரப்பளவு விளையாட்டு திடலை கொண்ட இப்பள்ளியில் சுற்றுச்சுவர் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இது சில இடங்களில் கீழே விழுந்தும் விட்டது. ஒரு பகுதியில் சுற்றுச்சுவரே கிடையாது. இதனால் பள்ளிக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. பள்ளியில் அவ்வப்போது திருட்டு சம்பவங்களும் நடக்கிறது. பள்ளியின் நலன் கருதி உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை